'ஒரு நாள் Promotion' - ஓய்வுபெறும் நாளில் பதவி உயர்வு அளிக்கும் மத்திய அரசு; பின...
அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பயிற்சி முகாம்
அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது.
தமிழக அரசு நூலகத்துறை மற்றும் கரூா் மாவட்ட நூலகம் சாா்பில் அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் மாணவா்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு அடிப்படைக் கணினி பயிற்சி மற்றும் ஓவிய பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில் ஈடுபட்ட மாணவா்களுக்கு நூலக உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளையும், மாணவா்களுக்கு பயிற்சியையும் கிளை நூலகா் இளைய சபரி செய்திருந்தாா்.