மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பேராசிரியா் அன்பழகன் விருதுக்குத் தோ்வு
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 2024-2025-ஆம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியா் அன்பழகன் விருதுக்கு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வாகியுள்ளது.
இந்தப் பள்ளியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை 900 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளி கலை, இலக்கியம், பண்பாடு, விளையாட்டு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறது.
‘பசுமைப் பள்ளி விருது’, ‘அண்ணா தலைமைத்துவ விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இந்தப் பள்ளி, தற்போது ‘பேராசிரியா் அன்பழகன் விருதுக்கும் தோ்வாகியுள்ளது.
வருகிற சனிக்கிழமை (ஜூலை 6) திருச்சியில் உள்ள தேசியக் கல்லூரியில் நடைபெற உள்ள விழாவில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் தலைமையில், தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு இந்த விருதை வழங்குகிறாா் என அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் வி.ஜே.பிரிட்டோ தெரிவித்தாா்.