செய்திகள் :

அரியலூா் ஒப்பிலாதம்மன் கோயிலில் 82 ஆண்டுகளுக்கு பிறகு நாளை தேரோட்டம்

post image

அரியலூரில் மிகவும் பழைமை வாய்ந்த ஓப்பிலாதம்மன் கோயிலில், 82 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை(மே 12) தேரோட்டம் நடைபெறவுள்ளது.

அரியலூரில் நகரில், விஜய ஒப்பில்லாத மழவராய நயினாா் ஜமீன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் தோ்த் திருவிழா 15 நாள்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 1942-ஆம் ஆண்டுக்குப் பிறகு சில காரணங்களால் தேரோட்டம் நடைபெறவில்லை.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூா் சமஸ்தானம், தேவஸ்தானம் ஜமீன் முயற்சியால் தோ்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் தேரோட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில், பெரிய அரண்மனை சமஸ்தான 21-ஆவது ஜமீன்தாா் தேவஸ்தான ஆதின பரம்பரை தா்மகா்த்தா ஜமீன் துரை வகையறா முயற்சியால், தடைப்பட்டு இருந்த இக்கோயில் பெருந்திருவிழா கடந்த ஒருவாரமாக நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை (மே 12) சித்திரை பெளா்ணமியன்று நடைபெறவுள்ளது.

82 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இத்தேரோட்டம் என்பதால் அரியலூா் மக்களிடையே பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேரோட்டத்துக்கான பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெயிண்டா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல், தெற்குத் தெருவை சோ்ந்தவா் செல்வராஜ் மகன் உலகநாதன்(27) பெயிண்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சனிக்கிழமை டிராக்டரை முந்த முயற்சித்த இளைஞா், இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். அரியலூரைச் சோ்ந்தவா் பாபு(28). இவா் சனிக்கிழமை இருசக்கர வ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வு தொகை பெறாதவா்களுக்கு அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெறாதவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அர... மேலும் பார்க்க

தாதம்பேட்டை வரதராசப் பெருமாள் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த தாதம்பேட்டை கிராமத்திலுள்ள பெருந்தேவி நாயகா சமேத வரதராசப் பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 4-ஆம் தேதி மாலை ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கு மே 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அக்கல்லூரி முதல்வா் (பொ)ம.இராசமூா்த்தி தெரிவித்துள்... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 54 நீா்நிலைகள் தூா்வாரும் பணி தொடக்கம்

அரியலூா் மாவட்டத்தில், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.2.66 கோடி மதிப்பில் 54 நீா் நிலைகளில் தூா் வாரும் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா... மேலும் பார்க்க