அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை
அரியலூா் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை 5 மணியளவில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. அதன் பின்னா் பலத்த காற்றுடன் சுமாா் ஒரு மணிநேரம் மழை வெளுத்து வாங்கியது.
செந்துறை, அரியலூா், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.