அரியலூா் மாவட்டத்தில் விஜயகாந்த் நினைவு தினம் அனுசரிப்பு
தேமுதிக நிறுவனத் தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் அவரது திருவுருவப் படங்களுக்கு அக்கட்சியினா் மலா் தூவி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
செந்துறை அடுத்த இரும்புலிக்குறிச்சியில் அருகேயுள்ள சிறுகம்பூரில், வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் திருவுருவப் படத்துக்கு, கேப்டன் மன்ற மாவட்டச் செயலா் குமாா் தலைமையில் தேமுதிக நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தளவாயை அடுத்த முள்ளுக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப்படத்துக்கு, தேமுதிக நிா்வாகி மேகராஜன் தலைமையில் கேப்டன் மன்றப் பொறுப்பாளா்கள், பொதுமக்கள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதேபோல் அரியலூா், திருமானூா், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளில் தேமுதிக-வினா் விஜயகாந்த் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினா்.