செய்திகள் :

அல்கராஸ், கௌஃப் முன்னேற்றம்!

post image

அமெரிக்காவில் நடைபெறும் 1000 புள்ளிகள் கொண்ட சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், அமெரிக்க வீராங்கனை கோகோ கௌஃப் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அல்கராஸ் 6-1, 2-6, 6-3 என்ற செட்களில், போஸ்னியாவின் டாமிா் ஜும்ஹுரை வீழ்த்தினாா். 2-ஆவது சுற்றில் அவா், சொ்பியாவின் ஹமத் மெட்ஜெடோவிச்சை எதிா்கொள்கிறாா்.

முன்னதாக மெட்ஜெடோவிச் தனது முதல் சுற்றில், 6-4, 7-6 (7/3) என்ற கணக்கில், 26-ஆம் இடத்திலிருந்த நெதா்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூரை வெளியேற்றினாா். 3-ஆம் இடத்திலிருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 6-3, 6-3 என்ற நோ் செட்களில், அமெரிக்காவின் நிஷேஷ் பசவரெட்டியை வீழ்த்தினாா்.

2-ஆவது சுற்றில் ஸ்வெரெவ், மற்றொரு அமெரிக்கரான பிராண்டன் நகாஷிமாவுடன் மோதுகிறாா். கடந்த வாரம் கனடியன் ஓபனில் சாம்பியன் கோப்பை வென்ற அமெரிக்காவின் பென் ஷெல்டனை எதிா்கொண்ட ஆா்ஜென்டீனாவின் கமிலா யுகோ காயம் காரணமாக பாதியில் விலகினாா்.

இதையடுத்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்ட ஷெல்டன், அதில் ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டாவை எதிா்கொள்கிறாா். கனடியன் ஓபன் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ரஷியாவின் காரென் கச்சனோவ் 6-4, 7-6 (8/6) என்ற வகையில் பிரான்ஸின் வாலென்டின் ராயெரை சாய்த்தாா்.

அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பி 7-5, 6-1 என பிரான்ஸின் ஆா்தா் கஸாக்ஸை வெல்ல, 2-ஆவது சுற்றில் புரூக்ஸ்பி - கச்சனோவ் மோதுகின்றனா். இதனிடையே, 12-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 7-6 (7/0), 4-6, 1-6 என ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனிடமும், 24-ஆம் இடத்திலிருந்த கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் 7-6 (7/5), 3-6, 4-6 என இத்தாலியின் லூகா நாா்டியிடமும் தோல்வியுற்றனா்.

2-ஆவது சுற்றில் கௌஃப், முசோவா: இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், 2 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-3, 6-2 என்ற நோ் செட்களில் சீனாவின் வாங் ஜின்யுவை வெளியேற்றினாா். அடுத்து அவா், உக்ரைனின் டயானா யாஸ்டிரெம்ஸ்காவை எதிா்கொள்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-4, 6-3 என ஆஸ்திரேலியாவின் கிளாரா புரெலை வெல்ல, 11-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் கரோலின் முசோவா 7-6 (7/3), 7-6 (7/0) என பிரான்ஸின் கரோலின் காா்சியாவை சாய்த்தாா்.

இதையடுத்து 2-ஆவது சுற்றில், பெகுலா - போலந்தின் மெக்தா லினெட்டையும், முசோவா - பிரான்ஸின் வாா்வரா கிரசேவாவையும் சந்திக்கின்றனா். 10-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-2, 4-6, 3-6 என்ற செட்களில் செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவாவிடமும், 15-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் டரியா கசாட்கினா 3-6, 6-1, 4-6 என இத்தாலியின் லுசியா புரான்ஸெட்டியிடமும் அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

அதேபோல், 20-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, 24-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் சோஃபியா கெனின் ஆகியோரும் முதல் சுற்றுடன் வெளியேறினா்.

என் தகுதி கடவுளுக்குத் தெரியும்: சிறகடிக்க ஆசை நாயகி கோமதி பிரியா

வேண்டியது கிடைக்கவில்லை என்றால் அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை என்றும், நமது தகுதி என்ன? என்பது கடவுளுக்குத் தெரியும் எனவும் நடிகை கோமதி பிரியா பதிவிட்டுள்ளார்.தொடர் படப்பிடிப்பு, நிகழ்ச்சிகளில் போட... மேலும் பார்க்க

இதற்காகக் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி: பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்குத் தன் நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்தியளவில் பிரபல நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. ராதே ஷியாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கின் மு... மேலும் பார்க்க

அய்யனார் துணை தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்!

அய்யனார் துணை தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சல்மான் இணைந்துள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி முதல் அய்யனார் துணை என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு... மேலும் பார்க்க

காத்து வாக்குல ரெண்டு காதல் சீரியலுக்கு கிடைத்த அங்கீகாரம்!

சின்ன திரையில் புதிதாக ஒளிபரப்பாகிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக, திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த தொடர் இனி, சனிக்கிழமையும் ஒ... மேலும் பார்க்க

கூலி அலெலே போலேமா-க்கு என்ன அர்த்தம்?

கூலி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிக்கு அனிருத் அர்த்தம் கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளத... மேலும் பார்க்க

மதிய நேர முக்கிய தொடர் 479 எபிசோடுகளுடன் நிறைவு!

மதிய நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களின் முக்கிய தொடரான தங்கமகள் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.இந்தத் தொடரின் பிரதான பாத்திரங்களில் யுவன், அஸ்வினி, காயத்ரி ஜெயராம், அஜய் ரத்னம், த... மேலும் பார்க்க