அவசர உதவி காவல் வாகனங்கள்: திருப்பத்தூா் எஸ்.பி. தொடங்கி வைத்தாா்
மாவட்டக் காவல் அலுவலகத்தில் இரு அவசர உதவி காவல் வாகனங்களை திருப்பத்தூா் எஸ்.பி. வி.சியாமளா தேவி வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
திருப்பத்தூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாவட்டத்துக்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் உள்கோட்டங்களுக்கு இரு அவசர உதவி காவல் வாகனங்களை எஸ்.பி. வி.சியாமளா தேவி வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
காவல் உதவி எண்கள்-100 அழைப்புகள் மற்றும் அவசர/முக்கிய பிரச்னைகளில், இந்த வாகனங்களில் பணியமா்த்தப்பட்டுள்ள காவலா்கள் உடனடியாக சென்று நடவடிக்கை மேற்கொள்வா்.
மேலும், இந்த வாகனங்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும் என எஸ்.பி. வி.சியாமளா தேவி தெரிவித்தாா்.