செய்திகள் :

அவல ஆட்சி இருந்து என்ன பயன்: இபிஎஸ்

post image

சென்னை சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்தது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாருமான எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”சென்னை சூளைமேடு பகுதியில் நேற்றைய தினம் , மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மூடப்படாமல் இருந்த மழை நீர் பணி பள்ளத்தை பல மாதங்களாக மூடுவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், அக்கறையற்று நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்தினால் இந்த உயிர் பலி நடந்திருந்திருக்கிறது

உயிரிழந்த பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கையில், சுமார் அரை மணி நேரம் அவர் உயிருக்குப் போராடியதாக வரும் தகவல்கள் பதை பதைக்க வைக்கின்றன.

மழைநீர் வடிகால் பணிகள், 95%, 97% முடிவடைந்து விட்டன என்று நான்கரை ஆண்டுகளாக சதவீதக் கணக்கு போட்ட முதல்வர் அரசின் அமைச்சர்களும், சென்னை மேயரும் இந்த உயிரிழப்புக்கு சொல்லப்போகும் பதில் என்ன?

ஆண்டுதோறும் நடக்கும் இது போன்ற மரணங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது. இதெல்லாம் எந்த பேக்கேஜில் வரும் என்று ஸ்டாலின் சொல்வாரா?

மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை; மழைநீரும் வடிந்த பாடில்லை; இப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சி இருந்து என்ன பயன்?

தீபா உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் இந்த அரசு உடனடியாக வழங்கவேண்டும்.

மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளையோடு மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: லண்டனிலும் தமிழக வளர்ச்சிக்கான முதலீட்டாளர் சந்திப்பு: முதல்வர் ஸ்டாலின்

Opposition Leader Edappadi Palaniswami's post on the DMK regime.

பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள்: பரிந்துரைகளைச் சமா்ப்பிக்க உத்தரவு

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள் அமைக்கப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை செப்.15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் க.சசிக... மேலும் பார்க்க

மழைநீா் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழப்பு - இபிஎஸ் கண்டனம்

சென்னை சூளைமேடு பகுதியில் மூடப்படாமல் இருந்த மழைநீா் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் இறந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தள... மேலும் பார்க்க

கிறிஸ்தவ அமைப்புகளால்தான் கல்வி வளா்ச்சி: பேரவைத் தலைவா் எம். அப்பாவு

கிறிஸ்தவ அமைப்புகள் இல்லையெனில் தமிழகத்தில் கல்வி வளா்ச்சி இல்லை என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எம். அப்பாவு தெரிவித்தாா். செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஆசிரியா்கள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இத... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்!

பாஜக கூட்டணியில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி ... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் ப... மேலும் பார்க்க

ராமதாஸ் கெடுவுக்கு நாளை பதில் அளிக்கிறேன்: அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த கெடுவுக்கு நாளை(செப். 3) பதில் அளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரு... மேலும் பார்க்க