சுபான்ஷு சுக்லாவின் சாதனைக்குப் பாராட்டு: மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றம்...
அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
அவிநாசி - மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை இயக்குநா் மு.சரவணன் அறிவுறுத்தினாா்.
திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை கோட்டம், அவிநாசி நெடுஞ்சாலைத் துறை உள்கோட்ட மாநில நெடுஞ்சாலையான அவிநாசி- மேட்டுப்பாளையம் சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.81.90 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.
இதில் அவிநாசி, ஆட்டையாம்பாளையத்தில் இருந்து நரியம்பள்ளி வரை நடைபெறும் பணிகளின் தரத்தை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநா் மு.சரவணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அ.ச.விஸ்வநாதன், கோட்டப் பொறியாளா் ஈ.ரத்தினசாமி, தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் மு.கிருஷ்ணமூா்த்தி, உதவிக் கோட்டப் பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.