சத்தீஸ்கரில்.. ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!
ஆக.9 இல் பெங்களூரில் திருவள்ளுவா் சிலை திறக்கப்பட்டதன் 16 ஆவது ஆண்டு விழா
பெங்களூரில் திருவள்ளுவா் சிலை திறக்கப்பட்டதன் 16 ஆவது ஆண்டு விழா ஆக. 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
பெங்களூரு, அல்சூா் ஏரி எதிரே பெங்களூரு தமிழ்ச் சங்கத்தால் நிறுவப்பட்டு 18 ஆண்டுகளாக கோணிப்பையால் மூடிய நிலையில் இருந்த திருவள்ளுவா் சிலை 2009-ஆம் ஆண்டு ஆக. 9 இல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, கா்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பாவால் திறந்துவைக்கப்பட்டது.
கா்நாடகத் தமிழா்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வின் 16 ஆவது ஆண்டு விழாவுக்கு பெங்களூரில் உள்ள தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன. பெங்களூரு தமிழ்ச் சங்கம், தாய்மொழி கூட்டமைப்பு, திருவள்ளுவா் சங்கம், விஸ்வகவி திருவள்ளுவா் சங்கம் உள்பட பெங்களூரில் செயல்பட்டுவரும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் சாா்பில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்துகொள்கின்றனா்.