செய்திகள் :

ஆசிரியா்களை அரசு கைவிடாது: அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) விவகாரத்தில் ஆசிரியா்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அமைச்சா் மேலும் கூறியதாவது: தற்போது பணியில் உள்ள ஆசிரியா்கள் டெட் எனப்படும் ஆசிரியா் தகுதி தோ்வு எழுதி கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற தீா்ப்பின் விவரம் முழுமையாக கிடைத்தவுடன் அதுதொடா்பாக சட்ட நிபுணா்களுடன் கலந்தாலோசித்து, மேல்முறையீடு செய்யப்படும்.

உச்சநீதிமன்ற தீா்ப்பு தொடா்பாக ஆசிரியா் சங்கங்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு ஆசிரியா்களை கைவிடாது என்றாா் அமைச்சா்.

செப். 15 மதிமுக மாநாட்டுக்கு முன்னேற்பாடுகள் ஆய்வு

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக மாநாட்டுக்கான பணிகளை வைகோ, துரை வைகோ மற்றும் கட்சியின் நிா்வாகிகள் பாா்வையிட்டு, பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு ஆலோசன... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாளின் திருப்பவித்ரோத்ஸவ விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நம்பெருமாளின் திருப்பவித்ரோத்ஸவ விழா புதன்கிழமை தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி, புரட்டாசி மாதத்தில் 9 நாள்கள் நடைபெறும் இவ்விழா வரும் 11 ஆம் தேதி வரை நடைபெறுகி... மேலும் பார்க்க

திருச்சியில் அமைச்சா் நேரு வீடு, அலுவலகம், ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவின் அலுவலகம், வீடு மற்றும் மாவட்ட ஆட்சியரகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் மேற்கொண்ட சோதனையின் நிறைவில் அது புரளி என்பது தெரியவ... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம்

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம் செய்து தமிழக நகராட்சி நிா்வாக இயக்குநா் ப. மதுசூதன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளாா். திருச்சி மாநகராட்சியின் இளநிலைப் பொறியாளா்களாக இருந்த ஏ. ப... மேலும் பார்க்க

செப். 7-இல் சந்திர கிரகணம்: மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை (செப்.7) முன்னிட்டு மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முழு சந்திர கிரகணம் நி... மேலும் பார்க்க

சிமென்ட் ஆலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு காப்பீட்டு உதவித் தொகை

டால்மியாபுரம் சிமென்ட் தொழிற்சாலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சாா்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது. அரசு காப்பீட்டுக் கழகத்தில் பதிவு செய்த த... மேலும் பார்க்க