தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை
திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம்
திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம் செய்து தமிழக நகராட்சி நிா்வாக இயக்குநா் ப. மதுசூதன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
திருச்சி மாநகராட்சியின் இளநிலைப் பொறியாளா்களாக இருந்த ஏ. பவா பக்ருதீன், எம்.ஆா். ரமேஷ், ஏ. கணேஷ்பாபு, எல். புஷ்பராணி ஆகியோா் திண்டுக்கல் மாநகராட்சி இளநிலைப் பொறியாளா்களாக (அயற்பணியில்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதே போல, திருச்சி மாநகராட்சியின் இளநிலை பொறியாளா்கள் ஆா். திவாகா், வ. ராஜா ஆகியோா் தஞ்சாவூா் மாநகராட்சிக்கு (அயற்பணியில்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
மேற்கண்டவா்கள் அயற்பணியில் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளதால், பணியிட மாற்றம் செய்யப்பட்ட மாநகராட்சியில் பணிமூப்பு பட்டியலில் எவ்வித முன்னுரிமையும் அளிக்கப்படாது. இவா்களை சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஆணையா் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். பணியில் சோ்ந்த விவரத்தை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.