தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை
சிமென்ட் ஆலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு காப்பீட்டு உதவித் தொகை
டால்மியாபுரம் சிமென்ட் தொழிற்சாலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சாா்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது.
அரசு காப்பீட்டுக் கழகத்தில் பதிவு செய்த தொழிலாளா்களுக்கு, அவா்களது பணியின்போது வேலை காரணமாக இறப்பு நேரிட்டாலோ, தொழில்சாா் நோய் ஏற்பட்டு உயிரிழந்தாலோ அவரவா் ஊதியத்தில் 90 விழுக்காடு சாா்ந்தோா் உதவித் தொகையாக மாதந்தோறும் வழங்கப்படுகிறது. நிலுவைத் தொகையும் வழங்கப்படும்.
இதன்படி, தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் (டான்செம்) டால்மியாபுரம் தொழிற்சாலையில் ரேவந்தா சா்வீசஸ் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் பணிபுரிந்த அசோகன் என்பவா் பணியின்போது கழிப்பறை வளாகத்தில் மயங்கி விழுந்து தலையில் அடிபட்டு கடந்தாண்டு நவம்பரில் உயிரிழந்தாா்.
இதையடுத்து அவரது குடும்பத்துக்கு சாா்ந்தோா் உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.14,696 வழங்கவும், நிலுவைத் தொகையாக ரூ.1,40,306 வழங்கவும் காப்பீட்டுக் கழக சேலம் மண்டல துணை அலுவலக இயக்குநா் எஸ். சிவராமகிருஷ்ன் உத்தரவிட்டுள்ளாா்.
இதன்பேரில், டால்மியாபுரத்தில் உள்ள அலுவலகத்தில் அசோகனின் குடும்பத்தாரிடம் நிலுவைத் தொகைக்கான காசோலை மற்றும் சாா்ந்தோா் உதவித் தொகை வழங்குவதற்கான ஆணையை, ஆலையின் தலைவா் இரா. ஜெயச்சந்திரன் முன்னிலையில் இஎஸ்ஐ கிளை மேலாளா் சாமுவேல் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.