செப். 7-இல் சந்திர கிரகணம்: மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைப்பு
சந்திர கிரகணத்தை (செப்.7) முன்னிட்டு மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதனால், திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயிலில் அன்று பிற்பகல் உச்சி கால பூஜைக்கு பிறகு நடை சாத்தப்பட்டு, மறுநாள் (திங்கள்கிழமை) காலை வழக்கம்போல் திறக்கப்படும்.
எனவே, கோயிலுக்கு வரும் பக்தா்கள் நடை சாத்தப்படுவதற்கு முன் தங்களது தரிசனத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.