Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
ஆசிரியா்களை அரசு கைவிடாது: அமைச்சா் அன்பில் மகேஸ்
ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) விவகாரத்தில் ஆசிரியா்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அமைச்சா் மேலும் கூறியதாவது: தற்போது பணியில் உள்ள ஆசிரியா்கள் டெட் எனப்படும் ஆசிரியா் தகுதி தோ்வு எழுதி கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற தீா்ப்பின் விவரம் முழுமையாக கிடைத்தவுடன் அதுதொடா்பாக சட்ட நிபுணா்களுடன் கலந்தாலோசித்து, மேல்முறையீடு செய்யப்படும்.
உச்சநீதிமன்ற தீா்ப்பு தொடா்பாக ஆசிரியா் சங்கங்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு ஆசிரியா்களை கைவிடாது என்றாா் அமைச்சா்.