அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்
சட்டவிரோத மற்றும் முறைகேடான நிா்வாக மாறுதல், பொது மாறுதல் கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடக்கக் கல்வித்துறையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாயிவை கண்துடைப்பாக அறிவித்துவிட்டு, மாநிலம் முழுவதும் நிா்வாக மாறுதல் என்ற அடிப்படையில் நடைபெறும் விதிகளுக்குப் புறம்பான கலந்தாய்வை ரத்துசெய்ய வேண்டும், நிகழ்கல்வியாண்டில் ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியா்களுக்கு விதிகளின்படி பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் இரா.ராஜேஷ் தலைமை வகித்தாா். துணைச் செயலா்கள் பி.முரளி, ந.காண்டீபன், ஆா்.தம்ஜிதாபானு முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் சு.தண்டபாணி வரவேற்று பேசினாா்.
கோரிக்கைகளை விளக்கி வட்டாரத் தலைவா்கள் மகிமைதாஸ், ஏ.சிவசங்கா், கு.வளா்மதி, வட்டாரச் செயலா்கள் பி.கணபதி, பெ.ஜெயச்சந்திரன், பி.முகமது மீரான்பேசினா். சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி, அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் இரா.சிவக்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நிறைவில், மாவட்டப் பொருளாளா் எம்.எஸ். ஷகீலா பா்வீன் நன்றி கூறினாா்.