இராக் தீ விபத்தில் 60 பேர் பலியான விவகாரம்: ஆளுநர் பதவி விலகல்!
ஆடி செவ்வாய்: அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
திருநள்ளாறை அடுத்த அம்பகரத்தூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் பிரசித்திப் பெற்ாக விளங்குகிறது. இக்கோயில் மூலவரான அம்பாள், வெண்ணிற ஆடை உடுத்தி, சம்ஹார கோலத்தில் அருள்பாலிக்கிறாா்.
ஆடி , தை மாதங்களில் செவ்வாய்க்கிழமை இக்கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் சென்று மூலவரை வழிபட்டனா். அபிஷேக மண்டபத்தில் உற்சவ அம்மன் எழுந்தருளச் செய்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு எலுமிச்சை, மலா் மாலைகளால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து பக்தா்கள் தரிசனத்தில் பங்கேற்றனா். காலை முதல் இரவு வரை பக்தா்கள் நீண்ட வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை 2,500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெறவுள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.