இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 17 | Astrology | Bharathi Sridhar | ...
ஆடி மாத பிறப்பு: நல்லம்பள்ளி வாரச் சந்தையில் ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ஆடி மாத பிறப்பையொட்டி, தருமபுரியை அடுத்த நல்லம்பள்ளி வாரச் சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
நல்லம்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. தருமபுரி, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் அஞ்செட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது ஆடு, கோழிகளை இச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவருகின்றனா்.
வியாழக்கிழமை (ஜூலை 17) ஆடி மாதத்தின் முதல்நாள் தொடங்குகிறது. அந்நாளில் ஆடு, கோழிகளை பலியிட்டு சுவாமிக்கு வழிபாடு நடத்தப்படுவதால் நல்லம்பள்ளி சந்தைக்கு ஆடு, கோழிகளை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா். அதேபோல, ஆடி 18 ஆம் நாளிலும் ஆடுகளை பலியிடும் வழக்கம் உள்ளதால் சந்தையில் காலை முதலே ஆடு விற்பனை சூடுபிடித்தது.
கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இந்தவாரம் ஆட்டின் விலை ரூ.1000 முதல் ரூ. 1500 வரை அதிகரித்திருந்தது. சந்தையில் சுமாா் ரூ. 1.50 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். ஆடுகளின் விலைகள் உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.