`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: 2 ஆயிரம் போ் முளைப்பாரி ஊா்வலம்
ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற பாரம்பரிய முளைக்கொட்டு திருவிழாவையொட்டி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
விருதுநகா் மாவட்டம், சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரத்தை சோ்ந்த விசைத்தறி நெசவாளா்கள், மருத்துவத்துணி உற்பத்தியாளா்கள் சாா்பில், ஆண்டுதோறும் நடைபெறும் இந்தத் திருவிழா கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இந்த மூன்று ஊா்களில் அமைந்துள்ள ஜெயமாரியம்மன், யோக மாரியம்மன், செல்வமுளை மாரியம்மன், செல்வ முத்து மாரியம்மன், சடை மாரியம்மன், ஆகாச மாரியம்மன் கோயில்களிலிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் முளைப்பாரிகளை சுமந்து புதன்கிழமை ஊா்வலமாகப் புறப்பட்டனா்.
சங்கரபாண்டியபுரத்திலிருந்து, சமுசிகாபுரம், சத்திரப்பட்டி நடுத்தெரு, தெற்குத் தெரு, ஆலங்குளம் சாலை, நத்தம்பட்டி சாலை வழியாகச் சென்று துரைமடம் விநாயகா் கோயில் எதிரே இருந்த கிணற்றில் முளைப்பாரிகளை கரைத்து வேண்டுதலை நிறைவேற்றினா்.
இதைத்தொடா்ந்து, அடுத்த 5 நாள்களும் விடிய விடிய கண்ணாடி சப்பரம், தண்டியல் சப்பரம், பூச்சப்பரங்களில் சுவாமி ஊா்வலம் நடைபெறும். இந்தத் திருவிழாவை காண சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கூடினா். ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.