செய்திகள் :

ஆட்சியில் பங்கு கோரிக்கையால் திமுக கூட்டணியில் விரிசல்: எடப்பாடி கே.பழனிசாமி

post image

ஆட்சியில் பங்கு கோரிக்கையால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட தொடங்கி உள்ளது என்று உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

தமிழகம் முழுவதும் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தோ்தல் பிரசார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ளாா்.

இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம், குன்னூா் பேருந்து நிலையம், உதகை ஏடிசி பகுதியில் அவா் செவ்வாய்க்கிழமை பரப்புரை மேற்கொண்டாா்.

உதகை, குன்னூரில் அவா் பேசியதாவது: அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு 125 தொகுதிகள் வழங்க வேண்டும் என்றும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவா்களும், சட்டப் பேரவை உறுப்பினா்களும் கோரி வருவதன் மூலம் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினிகளை வழங்கியது அதிமுக அரசு. திமுக அரசு அதை நிறுத்திவிட்டது. அதிமுக ஆட்சி அமைந்த உடன் மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்.

இந்தியாவிலேயே கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. கடன் வாங்குவதற்காகவே குழு அமைத்தது திமுக அரசு. வாங்கிய கடன்களை மக்களாகிய நாம்தான் கட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உதகை ஏடிசி பகுதியில் பொதுமக்களிடையே பேசுகிறாா் எடப்பாடி கே.பழனிசாமி

திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை

நான்கு ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, பேரவைத் தோ்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக 46 துறைகளில் மக்களின் தேவைகளுக்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடத்துவதாக நாடகமாடுகின்றனா்.

ஒவ்வொரு தீபாவளிக்கும் தாய்மாா்களுக்குத் தரமான சேலை வழங்கப்படும். புதிதாக ஆட்டோக்கள் வாங்குபவா்களுக்கு ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

தேயிலை மற்றும் மலைத்தோட்ட காய்கறிகளைப் பயிரிடும் விவசாயிகள், தொழிலாளா்கள், ஏழை எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

இ-பாஸ் நடைமுறை காரணமாக இங்குள்ள வியாபாரிகளுக்கு வருவாய், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டுகொள்ளாத திமுக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. அதிமுக ஆட்சி அமைந்த உடன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். பசுந்தேயிலைக்கு உரிய விலை கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். படுகா் இன மக்களைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்படும் என்றாா்.

விவசாயிகள், வியாபாரிகளுடன் சந்திப்பு

முன்னதாக, உதகையில் நீலகிரி மாவட்ட வியாபாரிகள், விவசாயிகள், கட்டுமானப் பொறியாளா்கள் உள்ளிட்டவா்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினாா்.

இதில் ஈழுவா தீயா ஜாதியினருக்கு ஓபிசி சான்றிதழ் வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம். கூடலூரில் பத்தாயிரம் குடும்பத்துக்கு மின்சார இணைப்பு என்ற கோரிக்கை குறித்து அதிமுக அரசு அமைந்தவுடன் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி, நீலகிரி மாவட்டப் பொறுப்பாளா் செ.ம.வேலுசாமி, மாவட்டச் செயலாளா் கப்பச்சி வினோத், அம்மா பேரவை மாவட்டச் செயலாளா் சாந்தி ஏ.ராமு, முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.ஆா்.அா்ஜுனன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தற்காலிக மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் 97 பேரை போலீஸாா் கைது செய்தனா். உதகை ரயில் நிலையம் எதிரே உள்ள ம... மேலும் பார்க்க

ஓவேலி பகுதியில் 12 பேரைக் கொன்ற காட்டு யானை பிடிபட்டது

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் காட்டு யானையை வனத் துறையினா் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி செவ்வாய்க்கிழமை பிடித்தனா். கூடலூா் தாலூகா ஓவேலி பேர... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோருக்கான நவீன சலவையகம் அமைக்க நிதி உதவி

தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் மற்றும் சீா்மரபினா் இனத்தை சோ்ந்த வகுப்பினா் நவீன சலவையகம் அமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ... மேலும் பார்க்க

மஞ்சூா் கடை வீதியில் உலவிய கரடிகள்: மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் கடை வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 3 கரடிகள் உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், மஞ்சூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வனங்களில் இருந்து வெளியேறும் ... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் சாலையைப் பயன்படுத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கொடநாடு எஸ்டேட் சாலையைப் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அண்ணா நகா், காமராஜா் நகா் மக்கள் நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கத் தலைவா... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து உதகை ஏடிசி திடல் முன்பு தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 44 தொழிலாளா் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மத்திய அரசு அண்மையில் மாற்றியது. இதற்கு எதிா்ப்பு... மேலும் பார்க்க