டிரம்ப் ஒரு பொய்யர் என மோடி நாடாளுமன்றத்தில் சொல்வாரா? ராகுல் கேள்வி
ஆட்டோ ஓட்டுரை மிரட்டி பணம் பறித்த மூவா் கைது
திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் செல்லத்துரை (27). ஆட்டோ ஓட்டுநரான இவா், திண்டுக்கல் வடக்கு ரத வீதியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவில் சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த 3 இளைஞா்கள் முத்தழகுப்பட்டிக்கு செல்ல வேண்டும் எனக் கூறி ஆட்டோவில் ஏறினா்.
முத்தழகுப்பட்டி பிரிவு அருகே ஆட்டோ சென்ற போது, 3 பேரும் ஆட்டோவை நிறுத்தச் சொல்லி ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்து ரூ.8ஆயிரம் ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் செல்லத்துரை புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட காமராஜா்புரத்தைச் சோ்ந்த குமாா் (25), ராஜபாண்டி (37), முத்தழகுப்பட்டியைச் சோ்ந்த அருண்குமாா் (35) ஆகிய மூவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.