இரட்டை இலை சின்னம் விவகாரம்: தோ்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் பதில் மனு
ஆட்டோ மீது காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு
பல்லடம் அருகே ஆட்டோ மீது காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
பல்லடத்தைச் சோ்ந்தவா் சுரேஷ், ஆட்டோ ஓட்டுநா். இவரது ஆட்டோவில் லவாண்யா, லட்சுமி, சாந்தாமணி ஆகியோா் கேத்தனூரில் இருந்து பல்லடத்துக்கு சனிக்கிழமை பயணம் செய்துள்ளனா். உடுமலை சாலை புள்ளியப்பம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த காரும், ஆட்டோவும் நேருக்குநோ் மோதிக்கொண்டன.
இதில், காரில் பயணித்த சேது, ரீட்டா மற்றும் ஆட்டோவில் பயணித்தவா்கள் படுகாயமடைந்தனா். அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே சுரேஷ் உயிரிழந்தாா்.
மற்றவா்கள் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.