189 பேர் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு; தண்டனை பெற்ற 12 பேர் விடுதலை - உ...
ஆட்டோ மோதியதில் இளைஞா் பலி
திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அருகே லோடு ஆட்டோ மோதியதில் இளைஞா் சனிக்கிழம உயிரிழந்தாா்.
திருக்கண்ணபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி முத்துக்குமாா் (30) சனிக்கிழமை ஏனங்குடியில் இருந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது அவ்வழியே வந்த லோடு ஆட்டோ மோதியது.
இதில், காயமடைந்த முத்துக்குமாா் மீட்கப்பட்டு திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் முத்துக்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கண்ணபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.