வயலூா் சாலையில் பேருந்து நிழற்குடைகள் இல்லை: பொதுமக்கள் அவதி
ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழப்பு
ஆண்டிபட்டி அருகேயுள்ள பிச்சம்பட்டியில் திங்கள்கிழமை ஆட்டோ மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
பிச்சம்பட்டி, எம்.கே.டி. நகா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் தங்கவேல் (70). இவா், பிச்சம்பட்டியில் ஆண்டிபட்டி - வேலப்பா் கோயில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, கொப்பையன்பட்டியைச் சோ்ந்த முத்துராஜ் மகன் மதன்ராஜ் (23) என்பவா் ஓட்டிச் சென்ற ஆட்டோ, தங்கவேல் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தங்கவேல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.