ஆண்கள் ஒப்புதலின்றி பெண்கள் விவாகரத்து செய்துகொள்ள முடியாத நாடுகள் என்னென்ன?
ஆண்கள் ஒப்புதலின்றி பெண்கள் விவாகரத்து செய்துகொள்ள முடியாத நாடுகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
ஆப்கானிஸ்தான் - பெண்களின் உரிமைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட நாடு
2021-இல் தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில், பெண்கள் விவாகரத்து செய்வதற்காகக் கோரிக்கை வைக்கும் அடிப்படையிலேயே மாற்றம் செய்திருக்கிறது. தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், இஸ்லாமியச் சட்டத்தின் மீதான தலிபானின் விளக்கத்தின் கீழ் விவாகரத்து கோர இருதரப்பினரும் நீதிபதி முன்பு ஆஜராக வேண்டும். இருப்பினும் அங்கு அடிப்படைப் பிரச்னை மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. இந்த மாற்றத்தின் மூலம், 2023-இல் ஆப்கனில் குடியரசின்போது முடிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான விவாகரத்து வழக்குகளை தலிபான்கள் செல்லாததாக்கியது.
முந்தைய அரசின் கீழ் விவாகரத்து பெற்ற பெண்கள் இப்போது கடுமையான விளைவுகளை எதிர்கொள்கின்றனர். கணவரின் அனுமதியின்றி விவாகரத்து பெற்று மறுமணம் ஆயிரக்கணக்கான ஆப்கானிய பெண்கள், தற்போது தலிபான் ஆட்சியின் கீழ் ஆபத்தில் சிக்கியுள்ளனர். தலிபான் ஆட்சியில் பாலியல் தொழில் செய்ததாகக் குற்றம்சாட்டி சிறையில் அடைக்கப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர்.
சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து மறுமணம் செய்துக்கொண்ட பெண்கள், குற்றவாளிகளாகக் கருதப்படும் பயங்கரமான சூழலை எதிர்கொள்கின்றனர்.
சௌதி அரேபியா - சர்வதேச மகளிர் தினத்தன்று எழுதப்பட்டது இந்த சட்டம்
சௌதி அரேபியா தனது தனிநபர் அந்தஸ்து சட்டத்தில் திருத்தம் செய்து, ஒரு ஆண் பாதுகாவலர் என்பதை முறையாக சட்டமாக்கியது, இது முரண்பாடாக 2022 சர்வதேச மகளிர் தினத்தன்று வெளியிடப்பட்டது. சௌதி அரேபியாவின் தனிப்பட்ட அந்தஸ்து குறித்த முதல் குறியீட்டுச் சட்டம், 2022 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று வெளியிடப்பட்டது. திருமணம், விவாகரத்து மற்றும் அவர்களின் குழந்தைகள் பற்றிய முடிவுகள் தொடர்பானவை அடங்கும். ஆண்கள் ஒப்புதலின்றி பெண்கள் விவாகரத்து செய்துகொள்ள முடியாத பாகுபாடான விதிகள் விதிக்கப்பட்டது.
சௌதி சட்டத்தின் கீழ், விவாகரத்து நடவடிக்கைகளில் ஆண்கள் அனைத்து அதிகாரத்தையும் கொண்டுள்ளனர். ஆண்கள் தங்கள் மனைவியை நிபந்தனையின்றி விவாகரத்து செய்யலாம். ஆண் தனது மனைவியை விவாகரத்து செய்ய விரும்புவதாகத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் விவாகரத்து ஆணையைப் பெறுவதற்கு மனைவி நீதிமன்றத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. பெண்களுக்கு ஒருதலைபட்ச விவாகரத்து கோர உரிமை இல்லை.
அவ்வாறு பெண்கள் விவாகரத்துக்கு நீதிமன்றத்தை அணுகினால், அதிக செலவாகும். அதனடிப்படையில் பெண்கள் விவாகரத்தைப் பெற முடியும். சட்டப்படி ஒரு ஆண் விவாகரத்துக்கு ஒப்புக்கொள்கிறார் என்றால் பெண் தனது வரதட்சணையின் முழுத் தொகையையும் ஆணுக்குத் திருப்பித் தர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மட்டுமே விவாகரத்திற்கு நீதிமன்றங்களை அணுக முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
ஈரான் - பிறப்பு முதல் இறப்பு வரை ஆண் பாதுகாவலர்
ஈரான் நாடு விரிவான ஆண் பாதுகாவலர் அமைப்பின் கீழ் செயல்படுகிறது. இந்த நாட்டில் பெண்களின் வாழ்வில் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டுப்படுத்துகிறது. விவகாரத்து உள்பட சௌதி அரேபியாவைப் போலவே, ஈரானில் உள்ள பெண்களுக்கு ஆண் பாதுகாவலரே நிர்வகிக்கிறார்கள். பெண்கள் திருமணம் செய்துகொள்ள, விவகாரத்து செய்ய, காவலைப் பெற, வாரிசுரிமை பெற மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்ல ஆண்களிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம்.
இந்த அமைப்பு பெண்களை நிரந்தர சார்புடையவர்களாகக் கருதுகிறது, அவர்கள் ஆண்கள் ஒப்புதல் இல்லாமல் அடிப்படை வாழ்க்கை முடிவுகளைக்கூட எடுக்க முடியாது. இந்த சட்டத்ததால் இளம் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஈரானில் சட்டபூர்வ திருமண வயது 13. ஆண் பாதுகாப்புக்காகச் சிறுமிகள் மேலும் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்கின்றனர்.
அதோடு, இளம் வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்ட பெண்கள், அதாவது அவரது கணவரின் அனுமதியின்றி அந்த திருமணத்திலிருந்து தப்பிக்க முடியாத சூழலும் உருவாகிறது. இந்த அமைப்பானது இளம் வயதிலேயே பெண்களைத் திருமணப் பந்தத்தில் சிக்க வைக்கிறது.
யேமன் - முரண்பாடு மற்றும் பாரம்பரிய இஸ்லாமியச் சட்டம்
யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சிப் படை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என பலர் கொல்லப்பட்டனர். நடந்துவரும் மோதல்கள் பெண்களின் உரிமைகளை இன்னும் ஆபத்தானதாகவே மாற்றியுள்ளது. மற்ற வளைகுடா நாடுகளைப் போல பாரம்பரிய இஸ்லாமியச் சட்டங்களை இந்த நாடும் பின்பற்றுகிறது.
சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தானில் நடக்கும் திருமணங்களில் ஒரே சமூகத்திற்குள்ளும், இரத்த உறவுகளிலேயே 65 சதவீதம் திருமணம் நடத்தப்படுகின்றது. மேலும் மௌரித்தேனியா, லிபியா, சூடான், ஈராக், ஈரான், ஜோர்டான், சிரியா, ஏமன், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலும் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் இதே முறையிலேயே திருமணம் செய்கின்றனர். நிச்சயிக்கப்பட்ட இந்த திருமணங்களால் விவாகரத்து பெறுவது மிகவும் கடினமாகும். யேமனில் நடந்து வரும் மனிதாபிமான நெருக்கடி பெண்களின் சட்ட உரிமையை மேலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
2012 உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர பாலின இடைவெளி ஆய்வில், மோசமான செயல்திறன் கொண்ட 18 நாடுகளில் 17 நாடுகள் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) உறுப்பினர்களில் யேமனை உள்ளடக்கியதாகக் கண்டறிந்துள்ளது. யேமனில் உள்ள பெண்கள் கோட்பாட்டளவில் சில சட்டப்பூர்வ காரணங்கள் இருந்தாலும் கூட, விவாகரத்து நடவடிக்கைகளை அணுகுவதில் பெரும் தடைகளையும், சிக்கலையும் எதிர்கொள்கின்றனர்.
சிரியா - போரால் சிதைந்த சட்ட அமைப்பு
சிரியா உள்நாட்டுப் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போருக்கு முன்பே, அங்குள்ள பெண்கள் விவாகரத்து நடவடிக்கைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சிரியா, பாகிஸ்தான், எகிப்து, மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில் வன்முறை அதிகமாகவும், சட்டப்பூர்வ உரிமைகள் குறைவாகவும் உள்ள நாடுகளாகும்.
இஸ்லாமியச் சட்டத்தின்படி விவாகரத்துக்கான குறிப்பிட்ட காரணங்களைப் பெண்கள் நிரூபிக்க வேண்டும். மேலும் ஆண் சாட்சியம் அல்லது ஒப்புதல் தேவைப்படுகிறது. மொரிட்டானியா, லிபியா, சூடான், இராக், ஈரான், ஜோர்டான், சிரியா, யேமன், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் 40% க்கும் அதிகமான திருமணங்கள் ஒரே சமூகத்திலும், இரத்த உறவுகளிலேயே செய்யப்படுகிறது.
விவாகரத்து கோரும் பெண்கள் தன் கணவரிடமிருந்து மட்டுமல்ல, முழு குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பையும் எதிர்கொள்கின்றனர்.
பாகிஸ்தான் - பாரம்பரிய நடைமுறைக்கு எதிராக சட்ட சீர்திருத்தங்கள்
சட்ட சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் பாரம்பரிய நடைமுறைகள் தொடந்துகொண்டுதான் இருக்கின்றது. பாகிஸ்தான், எகிப்து, துனிசியா, இலங்கை, வங்க தேசம், துருக்கி, இந்தோனேசியா, ஈராக், இந்தியா ஆகிய நாடுகளில் 'மும்முறை தலாக்' விவாகரத்துகளை ஒழித்த நாடுகள் ஆகும்.
இந்த சட்ட மாற்றங்கள் இருந்தபோதிலும், கிராமப்புறங்களிலும் பழமைவாத சமூகங்களிலும் பெண்கள் இன்னும் குறிப்பிடத்தக்கத் தடைகளை எதிர்கொண்டுதான் இருக்கின்றனர்.
பாகிஸ்தானில் சட்டத்திற்கும் நடைமுறைக்கும் இடையிலான இடைவெளி கணிசமானது. சில இஸ்லாமிய நீதிமன்றங்களில், ஆண்கள் எந்தவித காரணங்களும் இல்லாமல் பெண்களை விவாகரத்து செய்யலாம். ஆனால் அதே நேரத்தில் பெண்கள் விவாகரத்து செய்வதற்கான சரியான காரணத்தையும் ஆதாரத்தையும் சமர்பிக்க வேண்டும்.
ஆண்கள் குறைவான தடைகளை எதிர்கொள்ளும் அதே சமயத்தில், பெண்கள் சிக்கலான சட்டத் தேவைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டிய ஒரு அமைப்பை உருவாக்குகிறது. எனவே பெண்கள் விவாகரத்து நடவடிக்கைகளைத் தொடர்வது கடினமாகும்.
பிலிப்பின்ஸ் - ஒரு தனித்துவமான வழக்கு ஆய்வு
விவாகரத்துக்கு ஆண்களின் ஒப்புதல் கண்டிப்பாகத் தேவையில்லை என்றாலும், பெரும்பாலான குடிமக்களுக்கு விவாகரத்து சட்ட விரோதமாக இருக்கும் நாடுகளில் ஒன்றாக பிலிப்பின்ஸ் உள்ளது. வாடிகன் நகரத்தைத் தவிர, பெரும்பாலான குடிமக்கள் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்ய முடியாத ஒரே நாடு பிலிப்பின்ஸ் மட்டுமே.
பிலிப்பின்ஸின் நிலைமை, சட்டக் கட்டுப்பாடுகள் பெண்களைத் தேவையற்ற திருமணங்களில் சிக்க வைக்கும் என்பதைக் காட்டுகிறது.
பிரிந்து செல்ல விரும்பும் பிலிப்பின்ஸ் தம்பதிகளுக்கு இரண்டு வழிகள் உள்ளன. சட்டப்பூர்வ பிரிவினைக்கான தாக்கல், இது வாழ்க்கைத் துணைவர்கள் தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக நிறுத்தாமல் பிரிந்து வாழ அனுமதிக்கிறது, அல்லது திருமணத்தை ரத்து செய்ய விண்ணப்பிக்கலாம்.
இந்த வகையான விவாகரத்து மிகவும் விலை உயர்ந்தது என்றே கூறலாம். திருமணம் செல்லாதது என்பதற்கான ஆதாரத்தைக் கோருகிறது. தொழில்நுட்ப ரீதியாக ஆண்களின் ஒப்புதல் இதற்குத் தேவையில்லை என்றாலும், இது நடைமுறை தடைகளை உருவாக்குகிறது. இது பெரும்பாலும் பெண்களை தவறான சூழ்நிலைகளில் இருக்க கட்டாயப்படுத்துகிறது.
இவ்வாறு பல நாடுகளில், விவாகரத்து என்பது இரு பாலினத்துக்கும் பொதுவானதாக இல்லாமல், பெண்களுக்கு சற்று அல்ல மிகக் கடினமானதாகவே உள்ளது.