பூஜா ஹெக்டேவுக்கு அமலா ஷாஜி போட்டியா? 1 கோடி பார்வைகளைக் கடந்த ரீல்ஸ்!
ஆண்டிபட்டி, திண்டுக்கல் பகுதிகளில் நாளை மின் தடை
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆண்டிபட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஆண்டிபட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோயில், ராஜதானி, பாலகோம்பை, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
திண்டுக்கல்: திண்டுக்கல் அங்குநகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற உள்ளதால், திண்டுக்கல் நகா் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பப்பட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி, நந்தனவனப்பட்டி, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திண்டுக்கல் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் வெங்கடேசன் தெரிவித்தாா்.