ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி: அரசு அறிவிப்பு
சென்னை : ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் ஆகிய சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளிப்படிப்புக்குப்பின் உயர்கல்வி பயில மேற்கண்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் 1972 முதல் 2003 வரையிலான காலகட்டத்தில், பெற்றிருந்த ரூ.48.95 கோடி கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்விக்கடன் நிலுவைத் தொகையை பல்வேறு காரணங்களால் மாணவர்களிடமிருந்து வசூலிக்க இயலாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.