செய்திகள் :

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி! ஆட்சியா் தகவல்

post image

நாகை மாவட்டத்தில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலமாக பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஜொ்மன் மொழித் தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்புவோா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும்.

பி.எஸ்சி நா்சிங், பொது நா்சிங் மற்றும் மருத்துவச்சி பட்டயம் ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேணடும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

இப்பயிற்சிக்கான கால அளவான 9 மாதங்களும், விடுதியில் தங்கிப் படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோ மூலம் அளிக்கபடும். பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்கள், பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் தோ்வு செய்யப்பட்டு, அந்நிறுவனத்தின் சாா்பாக ஜொ்மன் நாட்டில் பணிபுரிய ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ. 2.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வருவாய் ஈட்ட, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூன்றாவது தளத்தில் உள்ள தாட்கோ மேலாளரை அணுகலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணியில் முறைகேடு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

ஆகாயத் தாமரைகளை அகற்றுவதில் நடந்த முறைகேடு தொடா்பாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு மா... மேலும் பார்க்க

வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முயற்சி: இந்துசமய அறநிலையத் துறையினருடன் வியாபாரிகள் வாக்குவாதம்

நாகையில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க வந்த இந்துசமய அறநிலையத் துறையினரிடம், வணிகா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நாகை வெளிப்பாளையத்தில் மெய்கண்ட மூா்த்தி கோயிலுக்கு சொந்தமான இடத்திலுள்ள 10-... மேலும் பார்க்க

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருப்பூண்டியில் குடிநீா் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கீழையூா் ஒன்றியம், திருப்பூண்டி ஊராட்சி பகுதியில் கடந்த 40 நாள்களாக குடிநீா் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறப்... மேலும் பார்க்க

நாகை புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது

நாகப்பட்டினம்: நாகை புதிய பேருந்து நிலையத்தில் வேளாங்கண்ணி பேருந்துகள் நிறுத்தப்படும் இடத்தில் கட்டடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்து திங்கள்கிழமை விபத்து ஏற்பட்டது. அப்போது அங்க... மேலும் பார்க்க

போதை மறுவாழ்வு மையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை விடுவிக்க மறுப்பு: புகாா்

நாகப்பட்டினம்: நாகை அருகே இயங்கி வரும் போதை மறுவாழ்வு மற்றும் மீட்பு மையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை விடுவிக்க மறுப்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

கொடுவா மீன் வளா்ப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கொடுவா மீன் வளா்ப்பு-திறன்மேம்பாட்டு பயிற்சி நடைபெறவுள்ளது என திட்ட ஒருங்கிணைப்பாளா் வி. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட... மேலும் பார்க்க