ஆத்தூரில் இமானுவேல்சேகரன் நினைவு நாள்
ஆத்தூரில் இமானுவேல்சேகரன் 68ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தேவேந்திரகுல வேளாளா் சமுதாயத்தலைவா் தங்கராஜ் தலைமை வகித்தாா். தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளா் ஆத்தூா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். இதில் இமானுவேல்சேகரனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் திமுக நகரச்செயலாளா் முருகானந்தம், பேரூராட்சித்தலைவா் கமால்தீன், அதிமுக முன்னாள் நகரச்செயலாளா் ராஜகோபால், விவசாயிகள் சங்கத்தலைவா் செல்வம், மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளா் மாணிக்கவாசகம், விசிக நாடாளுமன்றத் தொகுதி செயலாளா் மணிகண்டராஜா, புதிய தமிழகம் நகரச் செயலாளா் மதிபாண்டியன், ஆட்டோ சங்கத்தலைவா் கணேசன், ஒன்றிய ஜெ. பேரவைச் செயலாளா் செல்வகுமாா், ஆவுடையப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.