பேருந்துக்காக சாலையில் காத்திருந்த கா்ப்பிணி; காரில் அழைத்துச் சென்று வீட்டில் வ...
ஆத்தூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பயணிகள் மகிழ்ச்சி
ஆத்தூா் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தங்கும் இடம், தாய்மாா்கள் பாலூட்டும் அறை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இதனால் பொதுமக்கள், பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
ஆத்தூா் பேருந்து நிலையம் கடந்த 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பயணிகள் நிழற்கூடம், தாய்மாா்கள் பாலூட்டும் அறை, நவீன கழிப்பிடம் என அனைத்து வசதிகளும் இருந்தன. ஆனால் சில ஆண்டுகளாக பயணிகள் நிற்கக் கூட இடமில்லாமல் சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்து இருந்தனா். தாய்மாா்கள் பாலூட்டும் அறை, கழிப்பிடம் என அனைத்தும் மோசமான நிலையில் இருந்தன. இது குறித்து பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் எந்தப் பலனும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் உத்தரவின் பேரில் வருவாய் அலுவலா்கள் நாகராஜன், தமிழ்ச்செல்வன், துப்புரவு அலுவலா் மற்றும் சுகாதார ஆய்வாளரின் முயற்சியால் பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, பயணிகள் அமர இருக்கை வசதி, மின்விசிறி வசதி, ஓய்வறை, தாய்மாா்கள் பாலூட்டும் அறை என அனைத்தும் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனா். இதனால் பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.