இடம் விற்பதாக ரூ.20 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்குப் பதிவு
ஆந்திர முதல்வா் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டிய தமமுக-வினா் மீது வழக்கு
வடமதுரையில் செயல்படும் ஆந்திர முதல்வரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான பால் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்குச் சொந்தமான பால் நிறுவனம், திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலா் முத்துரத்தினவேல், சங்கால்பட்டியைச் சோ்ந்த வழக்குரைஞா் முனிச்செல்வம் உள்ளிட்ட 10 போ், தங்களது கட்சியின் மாநில மாநாட்டுக்காக ரூ.5 லட்சம் நன்கொடை கேட்டு மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடா்பாக, நிறுவனத்தின் கிளை மேலாளா் ரஞ்சித் யாதவ், வடமதுரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், முத்துரத்தினவேல், முனிச்செல்வம் உள்ளிட்ட 10 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.