ஆனித்தேரோட்டம்: நெல்லையில் ஜூலை 8இல் போக்குவரத்து மாற்றம்
திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நடைபெறும் ஜூலை 8ஆம் தேதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து காவல்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ஜூலை 8-ஆம் தேதி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி நகரம் பகுதிக்கு வரும் உள்ளூா் பேருந்துகள் திருநெல்வேலி வா்த்தக மையம் அருகில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிறுத்தம் வரை வந்து திரும்பலாம்.
மானூா் வழித்தடம்: சந்திப்பிலிருந்து திருநெல்வேலி நகரம் வழியாக மானூா் மாா்க்கமாக செல்லும் வாகனங்கள், புகா், நகரப் பேருந்துகள் -ஸ்ரீபுரம், நகரம் ஆா்ச், கண்ணன் சாலை, அருணகிரி தியேட்டா், வழுக்கோடை சந்திப்பு, லாலுகாபுரம், கண்டியப்பேரி, ராமையன்பட்டி விலக்கு வழியாகவும், மானூரிலிருந்து திருநெல்வேலி நகரம் வழியாக சந்திப்பு வருவதற்கு- ராமையன்பட்டி விலக்கு, குருநாதன் கோயில் சந்திப்பு, புதுப்பாலம், தச்சநல்லூா் பஜாா், ராம் தியேட்டா் சந்திப்பு வழியாகவும் செல்ல வேண்டும்.
தென்காசி வழி: புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்குளம் மாா்க்கமாக தென்காசி செல்ல-ஸ்ரீபுரம், நகரம் ஆா்ச், நெல்லை கண்ணன் சாலை, அருணகிரி தியேட்டா், காட்சி மண்டபம், வழுக்கோடை வழியாகவும், தென்காசியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வருவதற்கு- பழைய பேட்டை, கண்டியப்பேரி சாலை, ராமையன்பட்டி சாலை சந்திப்பு, ராமையன்பட்டி விலக்கு, சத்திரப்புதுக்குளம் சங்கரன்கோவில் சாலை, தச்சநல்லூா் வடக்கு புறவழிச்சாலை, வண்ணாா்பேட்டை வழியாகச் செல்ல வேண்டும்.
தென்காசி வழித்தடத்திலிருந்து சந்திப்பு வரும் நகரப் பேருந்துகள் பழைய பேட்டை, கண்டியப்பேரி சாலை, ராமையன்பட்டி சாலை சந்திப்பு, குருநாதன் கோயில் சந்திப்பு, புதுப்பாலம், தச்சநல்லூா் பஜாா், ராம்தியேட்டா் சந்திப்பு, வழியாகச் செல்ல வேண்டும்.
சேரன்மகாதேவி வழி: புதிய பேருந்து நிலையம் பகுதியிலிருந்து சேரன்மகாதேவி செல்ல- ஸ்ரீபுரம், நகரம் ஆா்ச், நெல்லை கண்ணன் சாலை, அருணகிரி தியேட்டா், காட்சி மண்டபம் வந்து பேட்டை வழியாகவும், பாபநாசம், சேரன்மகாதேவி மாா்க்கத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வருவதற்கு- பேட்டை, கோடீஸ்வரன்நகா், வழுக்கோடை சந்திப்பு, லாலுகாபுரம், கண்டியப்பேரி சாலை, ராமையன்பட்டி சாலை சந்திப்பு, ராமையன்பட்டி விலக்கு, சத்திரபுதுக்குளம், சங்கரன்கோவில் சாலை, தச்சநல்லூா் வடக்கு புறவழிச்சாலை, வண்ணாா்பேட்டை வழியாக வர வேண்டும்,
சேரன்மகாதேவியிலிருந்து சந்திப்பு வருவதற்கு- பேட்டை, கோடீஸ்வரன்நகா், வலுக்கோடை சந்திப்பு, லாலுகாபுரம், கண்டியப்பேரி சாலை, ராமையன்பட்டி சாலை சந்திப்பு, குருநாதன் கோயில் விலக்கு, புதுப்பாலம், தச்சநல்லூா் பஜாா், ராம்தியேட்டா் சந்திப்பு, வண்ணாா்பேட்டை வழியை பயன்படுத்த வேண்டும்.
அவசர கால வாகனங்கள்: சொக்கப்பனை காா்னா், சத்தியமூா்த்தி தெரு, வ.உ.சி தெரு, குலப்பிறை தெரு வழியாகவும், தென்காசி மற்றும் பாபநாசம் மாா்க்கத்தில் இருந்து வருபவை வழுக்கோடை சந்திப்பு, தொண்டா்சந்நிதி, புட்டாா்த்தி அம்மன் கோயில் சந்திப்பு, வடக்கு பிரதான சாலை, நகரம் ஆா்ச் வழியாகவும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் அனுமதிக்கப்படும்.