செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் வான்வழித் தடம் மூடல்!

post image

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களினால் அந்நாட்டின் வான்வழித் தடம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளின் மீது செவ்வாய்க்கிழமை (மே.7) நள்ளிரவு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் அதிரடியான தாக்குதல்களை நடத்தியது.

இந்தியாவின் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமபாத் மற்றும் லாஹூர் ஆகிய பகுதிகளின் வான்வழித் தடம் மூடப்படுவதாக அந்நாட்டின் விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், அங்கு செல்ல வேண்டிய விமானங்கள் அனைத்தும் கராச்சி விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் மொத்த வான்வழித் தடமும் 48 மணிநேரத்துக்கு மூடப்படுவதாக இன்று (மே.7) பாகிஸ்தான் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், சுமார் 8 மணி நேரத்துக்கு பின் வான்வழித் தடம் மீண்டும் திறக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்கள் அனைத்தும் கராச்சி மற்றும் லாஹூரிலுள்ள விமான நிலையங்கள் மூலமாகவே பெரும்பாலும் இயக்கப்பட்டன. ஆனால், லாஹூரின் வான்வழித் தடம் மீண்டும் 24 மணி நேரத்துக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, பாகிஸ்தானின் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், மேற்கு ஆசிய நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் உள்ளிட்ட அனைத்து விமானங்களும் தற்போது முழுவதுமாக இயக்கப்படுவதாகவும் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரையில் உள்நாட்டு விமானங்களும் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்களின் மீது இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்திய - பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம்: அமெரிக்கா அறிவுறுத்தல்!

பிரம்மோஸ் வான்வெளி சோதனைக்கூடம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

புது தில்லி: பிரம்மோஸ் வான்வெளி சோதனைக்கூடம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. லக்னௌ நகரில் நிறுவப்பட்டுள்ள ‘பிரம்மோஸ் வான்வெளி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனைக்கூடத்தை’ பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ச... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்!

புது தில்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை உடனடியாகக் கூட்ட பிரதமருக்கு நாடாளுமன்ற இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களும் கடிதம் எழுதியுள்ளனர்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: இந்திய விமானப்படை

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று இந்திய விமானப் படை விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான ராணுவ நடவடிக்கைகள் இன்னும் ... மேலும் பார்க்க

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கான கதவுகளைத் திறந்துவிட்டோமா? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கான கதவுகளை நாம் திறந்துவிட்டோமா என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபில் மீண்டும் இயல்புநிலை

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை காலை இயல்பு நிலை திரும்பியது.பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம்... மேலும் பார்க்க

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், ம... மேலும் பார்க்க