செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்: மக்களவையில் தொடரும் அமளி; பிற்பகல் 2 வரை ஒத்திவைப்பு!

post image

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால், மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றுமுதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இன்று காலை மக்களவை கூடியவுடன் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், மக்களவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியது.

இதுகுறித்து விவாதிக்க பின்னர் நேரம் ஒதுக்கப்படும் என்று நோட்டீஸை ஏற்க மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மறுத்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

முதலில், மக்களவை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடிய நிலையில், உடனடி விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மக்களவை அலுவல்கள் முடங்கிய நிலையில், பிற்பகல் 2 மணிவரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The Lok Sabha was adjourned till 2 pm as opposition parties were creating ruckus demanding an immediate discussion on Operation Sindoor.

இதையும் படிக்க : ஆபரேஷன் சிந்தூர்: மாநிலங்களவையில் கார்கே - நட்டா காரசார வாதம்!

நாடாளுமன்ற வளாகத்தில் விரைவில் மக்களிடம் முழு உடல் ஸ்கேனர் கருவிகள் மூலம் பரிசோதனை

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்ற வளாகத்துக்கு வரும் பொதுமக்களை முழு உடல் ஸ்கேனர்கள் மூலம் பரிசோதனை செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதையொட்டி, பாடி ஸ்கேனர்கள் எனப்படும் முழு உடல் பரிசோதனை கருவிக... மேலும் பார்க்க

ஊரக வேலை திட்டம் நிறுத்தப்படாது: மத்திய அமைச்சர் விளக்கம்

நமது நிருபர்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (மன்ரேகா) நிறுத்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் த... மேலும் பார்க்க

விமானக் கட்டணம் கடும் உயர்வு பிரச்னை: மத்திய அமைச்சர் பதில்

விமானக் கட்டணங்கள் அவ்வப்போது கடுமையாக உயர்த்தப்படுவதை மத்திய அரசு ஒழுங்குமுறைப்படுத்துவதில்லை என்று அத்துறையின் இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்ப... மேலும் பார்க்க

8-ஆவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன்?: மத்திய அமைச்சர் பதில்

மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன் என்று மக்களவையில் திருப்பெரும்புதூர் தொகுதி திமுக உறுப்பினரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார்.இதற... மேலும் பார்க்க

தமிழக மீனவர்களை விரைவாக விடுவிக்க முயற்சி: மத்திய அரசு

நமது சிறப்பு நிருபர்இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விரைவாக விடுவிக்க இந்திய தூதரகம் மூலம் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுவதாக மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்தார்.மக்கள... மேலும் பார்க்க

16 தமிழக கிராமங்களை மேம்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் பதில்

நமது சிறப்பு நிருபர்காலநிலை மாற்ற பாதிப்புகளை எதிர்கொள்ளும் கடலோர கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 16 கிராமங்கள் தேர்வாகியுள்ளதாக திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சசிகாந்த்... மேலும் பார்க்க