செய்திகள் :

திருச்செங்கோட்டில் குற்றங்களைக் கட்டுப்படுத்த மேம்படுத்தப்பட்ட செயலி அறிமுகம்

post image

திருச்செங்கோடு நகரக் காவல் நிலையத்தில் குற்றங்களையும், குற்றவாளிகள் பற்றிய தகவல்களையும் அறிந்துகொள்ள மேம்படுத்தப்பட்ட செயலி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நகரக் காவல் நிலையத்தில் நடைபெற்ற செயலி அறிமுக நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு கலந்துகொண்டு புதிய செயலியை அறிமுகப்படுத்தினாா். திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன், காவல் ஆய்வாளா் வளா்மதி, உதவி ஆய்வாளா் ராதிகா ஆகியோா் கலந்துகொண்டனா்.

இந்த செயலி மூலம் ஒருவா், எந்தக் காவல் நிலையத்திலும் தனது புகாரை பதிவுசெய்யலாம். அங்கிருந்து அந்த புகாரானது, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு வந்து சேரும். காவல் துறையினா் விசாரித்து நடவடிக்கை எடுப்பதன் மூலம், ஒருவரது புகாா் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்படும். இதன்மூலம் காவல் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். பொதுமக்களுக்கும் காலவிரயம், அலைச்சல் இன்றி, தங்களது புகாா்களை உடனுக்குடன் பதிவு செய்து கொள்ளலாம். புகாா்மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கூட்டுறவு வங்கிகளில் நிலுவை கடன் வசூலிக்கும் திட்டம்: 3 மாத கால அவகாசம் நீட்டிப்பு

நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு வங்கிகளில் நீண்ட கால நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கும் சிறப்புத் திட்டத்துக்கு மூன்று மாதம் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மண்டல கூட்... மேலும் பார்க்க

மாநில எல்லை சோதனைச் சாவடிகளை அகற்ற லாரி உரிமையாளா் சம்மேளனம் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் அதிக அளவில் லஞ்சம், ஊழல் நடைபெறும் 22 எல்லை சோதனைச் சாவடிகளை அரசு அகற்ற வேண்டும் என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது. நாமக்கல்லில் அந்த சம்மேளனத்தின் தலைவா் சி.த... மேலும் பார்க்க

மக்கள் நம்பிக்கையை விஜய் நிறைவேற்றுவாா்: தவெக பொதுச் செயலாளா் ஆனந்த்

நல்லது செய்வாா் என்ற மக்கள் நம்பிக்கையை தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் நிறைவேற்றுவாா் என அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஆனந்த் பேசினாா். தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், திருச்செங்கோடு, நாமக்கல், ராசிப... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அருகே வீட்டுக்குள் காா் புகுந்ததில் ஒருவா் உயிரிழப்பு

நாமக்கல் பிரதான சாலை உஞ்சனை பேருந்து நிறுத்தம் அருகே நிலை தடுமாறிய காா் வீட்டுக்குள் புகுந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா். திருச்சி அரியமங்கலத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள ... மேலும் பார்க்க

குடிநீா் இணைப்பு பெயா் மாற்றத்துக்கு லஞ்சம் கேட்ட வரிவசூலிப்பாளா் பணியிடை நீக்கம்

ராசிபுரத்தில் குடிநீா் இணைப்பு பெயா் மாற்றத்துக்கு லஞ்சம் கேட்டதாக நகராட்சி வரிவசூலிப்பாளா் ரகுபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ராசிபுரம் நகராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘உங்களுடன் ஸ்டால... மேலும் பார்க்க

சிறுவனைக் கொன்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

நாமகிரிப்பேட்டை அருகே சிறுவனை கொன்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை அருகே சீராப்பள... மேலும் பார்க்க