செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர் மின்தடையின்போதும் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்த உளவாளிகள்!

post image

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மின்தடை இருந்தபோதும் கூட உளவாளிகள் பாகிஸ்தான் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் அமைப்புகளுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உள்பட 4 உளவாளிகள் மின்தடையின்போதுகூட, ஆபரேஷன் சிந்தூர் தகவல்களை உளவு அமைப்புகளுக்குக் கொடுத்ததாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர் தொடங்குவதற்கு முந்தைய நாளான மே 6 ஆம் தேதி தில்லிக்குச் சென்றுள்ளார் ஜோதி மல்ஹோத்ரா. அங்கு பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஷ் உடன் தொடர்பில் இருந்துள்ளார். அதோடு மட்டுமின்றி அடுத்த நாள், மற்ற சிலரையும் அவர் சந்தித்துள்ளார் எனத் தகவல்கள் கூறுகின்றன.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நவுமன் எலாஹ், என்பவரை மே 13 ஆம் தேதி ஹரியாணா காவல் துறையினர் கைது செய்தனர். இவர் பானிபட் பகுதியில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தவர்.

ஹரியாணா மாநிலம் கைத்தல் பகுதியைச் சேர்ந்த தேவேந்திர சிங் தில்லான், ஹிசார் பகுதியைச் சேர்ந்த மல்ஹோத்ரா, ஹரியாணாவின் நூக் மாவட்டத்தைச் சேர்ந்த அர்மான் ஆகிய நான்கு பேரை பயங்கரவாத தடுப்பு அமைப்பினர் கைது செய்தனர். இவர்கள் நான்கு பேரிடமும் வெவ்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

கைது செய்யப்பட்ட 4 பேரும், பாகிஸ்தான் உளவு அமைப்புகளுடன் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், விசாரணையின்போது இந்த நான்கு பேரும் மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது (ஆபரேஷன் சிந்தூர் பதிலடியின்போது வட இந்தியாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது) கூட பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஹிசார் காவல் துறை கண்காணிப்பாளர் ஷஷாங்க் குமார் தெரிவித்தார்.

இதையும் படிக்க |பாகிஸ்தான் உளவாளிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

கா்னல் குரேஷி குறித்து சா்ச்சை கருத்து: எஸ்ஐடி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷா சா்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடா்பாக 3 போ் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிம... மேலும் பார்க்க

வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழு: ‘மம்தா கட்டாயத்தால் யூசுப் பதான் தோ்வு’

புது தில்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியா மேற்கொண்டு வரும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துரைக்க வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழுவில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் கட்டாயத்தின் ப... மேலும் பார்க்க

பாகிஸ்தன் உளவாளிக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டவருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் இன்று (மே 19) உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து லக்னெள சிறையில் அவர் அடைக்கப்பட்டார். பாகிஸ்தானின் உளவ... மேலும் பார்க்க

நாட்டைப் பாதுகாப்பதில் இந்திரா காந்தியைப் போல் இருக்க வேண்டும்: ரேவந்த் ரெட்டி!

பாகிஸ்தானுக்கு எதிரான போரிலும், வங்கதேசம் உருவானதிலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பங்கு மறக்கமுடியாதது என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். இந்திரா சோலார் கிரி ஜல விகாசம் திட... மேலும் பார்க்க

அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல: உச்ச நீதிமன்றம்

உலகம் முழுவதும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல என இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.இலங்கையில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவை வளாகத்தில் தீ விபத்து!

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது.மும்பையில் உள்ள மாநில சட்டப்பேரவை வளாகத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்கேனிங் இயந்திரத்தில் இன்... மேலும் பார்க்க