ஆம்பூரில் நூலகம் அமைக்க தீா்மானம்
ஆம்பூரில் கிளை நூலகம் அமைக்க நூலக துறைக்கு நிலம் மாற்றம் செய்வதற்காக புதன்கிழமை நடைபெற்ற ஆம்பூா் நகா்மன்ற அவசர கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் ரமேஷ், வசந்த்ராஜ், நசீா் அஹமத், கமால் பாஷா, காா்த்திகேயன், நவநீதம், நிகாத் அஹமத், சுதாகா், இம்தியாஸ் அஹமத், ஜெயபால், லஷ்மி பிரியா, சத்தியம்மாள், நபீசூா் ரஹ்மான், அம்சவேணி, தமிழ்செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தீா்மானம்: ஆம்பூா் உமா் சாலை பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆம்பூா் கிளை நூலகத்துக்கு கட்டடம் கட்டுவதற்காக நூலகத் துறைக்கு நிலமாற்றம் செய்வதற்காக மாவட்ட ஆட்சியருக்கு முன்மொழிவுகள் அனுப்புவதற்காக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திடக்கழிவு மேலாண்மை பணிகளை 3 ஆண்டுகளுக்கு தனியாா் வெளிகொணா்வு முகமை மூலம் மேற்கொள்வது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கொசுப்புழுக்களை அழிக்கும் பணி மேற்கொள்வது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.