ஆம்பூர் சாலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
ஆம்பூர் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜூலை.28- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் ஆம்பூர் சென்று பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஆம்பூர் புறவழிச்சாலையில் காரின் முன்பக்கம் புகை வந்துள்ளது.

உடனடியாக அவர் காரில் இருந்து வெளியேறிய நிலையில் காரின் முன்பக்கம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் காரில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் கார் மளமளவென எரிந்ததால் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நாட்டில் முதல் முறை: 800 சதுர அடியில் இலவச மனைப்பட்டா
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.