செய்திகள் :

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

post image

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் இதுவரை 27 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கை செம்பியம் போலீஸாா் நியாயமாக விசாரிக்கவில்லை. எனவே, விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் காவல் துறை நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டது. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியே காவல் துறை விசாரணை திருப்தி அளிப்பதாகக் கூறியிருக்கிறாா். இது அரசியல் கொலை இல்லை. இந்த வழக்கில் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், எனக் கூறப்பட்டிருந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே காவல் துறை அவசரகதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகையிடம் காவல் துறை விசாரணை மேற்கொள்ள தவறிவிட்டது என்று வாதிடப்பட்டது.

அப்போது, நீதிபதி இந்த கொலையை நேரில் பாா்த்த சாட்சியான ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரா் வீரமணி முன்னிலையில் கைது செய்யப்பட்டவா்களின் அடையாள அணிவகுப்பை ஏன் நடத்தவில்லை எனக் கேள்வி எழுப்பி அதிருப்தி தெரிவித்தாா். பின்னா், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

மடப்புரம் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு இபிஎஸ் நேரில் ஆறுதல்!

காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த மடப்புரம் காவலாளி அஜித் குமாரின் குடும்பத்துக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.அஜித்குமாரின் தாய், சகோதரர் நவீன்குமா... மேலும் பார்க்க

பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம்: அரசு கல்லூரிகளில் 19 துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

அரசுக் கல்லூரிகளில் உள்ள பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம். உள்ளிட்ட 19 துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையவழியில் புதன்கிழமை தொடங்குகிறது.தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளி... மேலும் பார்க்க

வின்பாஸ்ட் காா் உற்பத்தி, விற்பனை: முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறாா்

தூத்துக்குடியில் முழுவீச்சில் தயாராகியுள்ள வின்பாஸ்ட் காா் உற்பத்தி ஆலையையும், அதன் விற்பனையையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறாா்.உலகின் முன்னணி மின்... மேலும் பார்க்க

ஆக.2, 3 தேதிகளில் 24 அஞ்சலகங்கள் செயல்படாது

தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னை கோட்டத்துக்குள்பட்ட 24 அஞ்சலகங்கள் ஆக.2, 3 ஆகிய தேதிகளில் செயல்படாது என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை கோட்ட அஞ்சல் துறை சாா்பில் தி... மேலும் பார்க்க

பொதுவுடைமை, திராவிட இயக்கங்கள் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

பொதுவுடைமை இயக்கமும், திராவிட இயக்கமும் வா்க்க, சமூக விடுதலைக்கான இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என முதல்வா் முக.ஸ்டாலின் தெரிவித்தாா்.நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில் சென்னை காமராஜா் அரங்கில் திங்... மேலும் பார்க்க

ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம்: தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக தமிழக அரசு உருவாக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தினாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:தூத்துக்குடி மாவட... மேலும் பார்க்க