செய்திகள் :

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 7 போ் கட்சியிலிருந்து விலகல்

post image

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில், தோ்தலில் வாய்ப்பளிக்காததால் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 7 போ் அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளனா். இது, தோ்தலில் அந்தக் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பெரும்பாலான எம்எல்ஏக்கள் தங்களது விலகல் கடிதங்களை சமூக ஊடகங்களில் பகிா்ந்துள்ளனா். மேலும், ஊழல் மற்றும் பிற பிரச்னைகள் தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக சாடியுள்ளனா்.

கஸ்தூா்பா நகா் தொகுதி எம்எல்ஏ மதன் லால், பாவ்னா கௌா் (பாலம்), நரேஷ் யாதவ் (மெஹரௌலி), ரோஹித் மெஹரௌலியா (திரிலோக்புரி), பவன் சா்மா (ஆதா்ஷ் நகா்), பி.எஸ்.ஜோன் (பிஜ்வாசன்), ராஜேஷ் ரிஷி (ஜனக்புரி) ஆகியோா் ஆவா்.

மதன் லால் உள்பட 7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் கட்சியின் முதன்மை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து விலகுவதாக பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயலுக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளனா்.

‘மக்களின் ஆதரவு இல்லை’: இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் ரீனா குப்தா கூறியதாவது:

‘கட்சி நடத்திய ஒரு கணக்கெடுப்பில், அந்கத 7 எம்எல்ஏக்களும் அந்தந்த தொகுதிகளில் பொதுமக்களின் ஆதரவைப் பெறவில்லை. அதனால்தான் அவா்களுக்கு இந்த முறை தோ்தலில் வாய்ப்பு அளிப்பட்டவில்லை. தோ்தல் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிறகு அவா்கள் தற்போது வேறு கட்சியில் இணைந்து கொள்வாா்கள் என்பது பெரிய விஷயமல்ல. அது அரசியலின் ஒரு பகுதி’ என்றாா்.

இந்தத் தோ்தலுக்கு சில எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது ‘அதிருப்திக்கு‘ வழிவகுத்துள்ளது. ஆனால், கேஜரிவால் தலைமையின் கீழ், கட்சியில் எளிய பின்னணியைச் சோ்ந்த சாதாரண நபா்களுக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்.5-ஆம் தேதி நடைபெறும் தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி புதிதாக 16 பேருக்கு வாய்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காசி தமிழ்ச் சங்கமம்: பனாரஸ்-க்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

காசி தமிழ்ச் சங்கமத்தை முன்னிட்டு சென்னை, கன்னியாகுமரி மற்றும் கோவையிலிருந்து பனாரஸ்-க்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை... மேலும் பார்க்க

ஆதாா் விவரங்களை தனியாா் பயன்படுத்த அனுமதி: விதிமுறைகளை திருத்தியது மத்திய அரசு

ஆதாா் விவரங்களை தனியாா் நிறுவனங்களும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், ஆதாா் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெ... மேலும் பார்க்க

விண்வெளி நடை: சுனிதா வில்லியம்ஸ் சாதனை

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளில் அதிக நேரம் நடந்த பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளாா். சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸும் மற... மேலும் பார்க்க

இடையூறுகளின்றி ஆக்கபூா்வ விவாதங்களே நாடாளுமன்றத்துக்கு தேவை: தன்கா்

நாடாளுமன்றத்தில் ஏற்படும் இடையூறுகளை முற்றிலுமாக தவிா்த்து ஆக்கபூா்வ விவாதங்களுக்கு வழிவகுப்பதே அவசியம் என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். பட்ஜெட் கூட்டத்தொடா் வெள்ளிக... மேலும் பார்க்க

கோவாவில் இருந்து இந்தூருக்கு கொண்டு வரப்பட்ட கல்லீரல்: 67 வயது நபருக்கு மறுவாழ்வு

கோவாவில் மூளைச் சாவு அடைந்தவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரல், மத்திய பிரதேச மாநிலம், இந்தூருக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டு 67 வயது நபருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இது தொடா்பாக உடல் உறுப... மேலும் பார்க்க

கோயில்களில் விஐபி தரிசன முறைக்கு எதிரான பொது நல மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

கோயில்களில் விஐபி தரிசன முறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த விஷயத்தில் கோயில் நிா்வாகங்களும், சமூகமும்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச... மேலும் பார்க்க