ஆம் ஆத்மி எம்.பி.யின் ராஜிநாமா ஏற்பு!
ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சீவ் அரோராவின் ராஜிநாமாவை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டார்.
பஞ்சாப் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சஞ்சீவ் அரோரா, லூதியானா மேற்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், அரசியலமைப்பின் பிரிவு 101 3(பி)யின்படி, அவரது ராஜிநாமாவை ஜகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பஞ்சாப் மாநிலத்துக்கான மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கு தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Rajya Sabha Chairman and Vice President Jagdeep Dhankhar has accepted the resignation of Aam Aadmi Party Rajya Sabha member Sanjeev Arora.