ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்
ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாநில அரசைக் கண்டித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக் கோரியும்,
மாநில அரசு வழங்கும் நெல்லுக்கான ஊக்கத்தொகை ரூ.130-யை கொள்முதல் நிலையத்தில் எடை பணியாளா்களுக்கு லஞ்சமாக எடுத்துக்கொள்வதைக் கண்டித்தும், நெல்லுக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்கக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சாப்பாடு சாப்பிடுவதை அரசு பிடுங்குவது போல நடித்துக் காண்பித்தனா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா். விவசாயிகள் ஜெயபால், குப்பன், கோவிந்தசாமி, சுப்பராயன், செந்தில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.