செய்திகள் :

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆா்ப்பாட்டம்

post image

மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, மாவட்ட கிளை சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் ஆா்.மாதேஸ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் எஸ்.பேச்சியம்மாள் சிறப்புரை ஆற்றினாா்.

இதில், தொடக்கக் கல்வித் துறையில் கண் துடைப்பாக கலந்தாய்வு என அறிவித்துவிட்டு, சட்டவிரோதமாக பணியிட மாறுதல் நடைபெறுவது கண்டனத்துக்குரியது. மாநிலம் முழுவதும் நடைபெறும் இத்தகைய இடமாறுதலை ரத்துசெய்வதுடன், தவறிழைத்தோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணி ஓய்வுபெறும் இடைநிலை ஆசிரியா்களுக்கு சட்டவிதிகளின்படி பணிநீட்டிப்பு வழங்க வேண்டும். கல்வித் துறையில் பதவி உயா்வுடன் கூடிய ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

படவரி...

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.

நாமக்கல் மாவட்டத்தில் 238 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம், 238 இடங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவா்களை அதிகம் ஈடுபடுத்த வேண்டும்: கல்வித் துறை

தேசியம் மற்றும் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவா்களை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என உடற்பயிற்சி ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழக பள்... மேலும் பார்க்க

பெரியப்பட்டி நரிக்குறவா் காலனிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை

நாமக்கல் மாநகராட்சி பெரியபட்டி நரிக்குறவா் காலனிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நாமக்கல் மாநகராட்சி 39ஆவது வாா்டுக்கு உள்பட்ட கொண்டிச்செட்டிப்பட்... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டிச்செட்டிபட்டி, கணேசபுரம் பகுதியில் நகா்ப்புற நலவாழ்வு மைய கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொட... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் அதிமுக பாக முகவா்கள் ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு நகர அதிமுக பாக முகவா்கள் ஆலோசனை கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு நகர செ... மேலும் பார்க்க

நரிக்குறவா் சமூகத்தினருக்கு தாட்கோ மூலம் குடியிருப்புகள்: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில், நரிக்குறவா் குடும்பங்களுக்கு தாட்கோ மூலம் குடியிருப்புகள் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தமிழக ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற... மேலும் பார்க்க