செய்திகள் :

ஆர்ஜென்டீனா முன்னாள் அதிபர் மீது அமெரிக்கா தடை!

post image

ஆர்ஜென்டீனா முன்னாள் அதிபர் மீது அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது.

ஊழல் வழக்கில் சிக்கிய ஆர்ஜென்டீனா நாட்டின் முன்னாள் அதிபர் கிறிஸ்டீனா ஃபெர்னாண்டஸ் அமெரிக்காவினுள் நுழைய அந்நாட்டு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அவரது அமைச்சரான ஜூலியோ மிகுவேல் டி விட்டோ மற்றும் அவர்கள் இருவரது குடும்பத்தினர்களுக்கும் இந்த பயணத் தடையானது விதிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்கவைச் சேர்ந்த ஆர்ஜென்டீனா நாட்டின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய முன்னாள் அதிபர் கிறிஸ்டீனா ஃபெர்னாண்டஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் அந்நாட்டு நீதிமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு அவரை குற்றவாளியென தீர்ப்பளித்து அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது.

இதையும் படிக்க:நெட்ஃபிளிக்ஸ் தொடருக்காக 44 மில்லியன் டாலர் மோசடி!

இதுகுறித்து அமெரிக்க அரசின் தலைமை செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அதிபர் கிறிஸ்டீனா மற்றும் டி விட்டோ ஆகிய இருவரும் தங்களது பதவியைப் பயன்படுத்தி பொதுப் பணித்துறை ஒப்பந்தங்களின் மூலம் ஊழலில் ஈடுபட்டதாகவும் இதனால் ஆர்ஜென்டீனா அரசுக்கு சேர வேண்டிய பல மில்லியன் டாலர் அளவிலான பணம் திருடப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை பல்வேறு நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளதை குறிப்பிட்டு பேசிய அவர் தங்களது பதவியை பயன்படுத்தி ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டு சர்வதேச அளவிலான ஊழலைக் கட்டுப்படுத்தும் எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்து வரும் முன்னாள் அதிபர் கிறிஸ்டீனா ஆர்ஜென்டீனா நீதிமன்றத்தில் கடந்த 2024 நவம்பரில் மேல் முறையீடு செய்தார்.

ஆனால், அங்கு அவரது சிறைத் தண்டனையை உறுதி செய்யப்பட்டு மீண்டும் அதிபர் பதவியிக்கு போட்டியிட அவருக்கு வாழ்நாள் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட நக்சல்களின் உடல்கள் மீட்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் என்கவுன்டரில் பலியான 3 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் க... மேலும் பார்க்க

இந்தியா - வங்கதேச எல்லையில் கடத்தப்படும் கால்நடைகள்!

மேற்கு வங்கத்திலுள்ள இந்தியா - வங்கதேசத்தின் எல்லையில் 16 கால்நடைகள் மற்றும் போதைப் பொருள் ஆகியவற்றை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மால்டா மாவட்டத்தின் எல்லைப் புறக்காவல் ... மேலும் பார்க்க

விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக விடியோ பதிவிட்ட மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கராச்சியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளரும் ரஃப்தார் எனும் டிஜிட்டல... மேலும் பார்க்க

பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியைத் தினமணி நாளிதழ் ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்தித்துப் பேசினார்.தில்லியில் பிரதமரை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை சந்தித்த கி. வைத்தியநாதன், தினமணியின் 90 ஆம் ஆண்டு சிறப்பு மலர் ... மேலும் பார்க்க

பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை: முதல்வர்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக செ... மேலும் பார்க்க

ஆப்கனில் பெண் கல்வி மீதான தடை தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும்: ஐ.நா. கண்டனம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் கல்வி கற்க தலிபான்கள் விதித்துள்ள தடையானது தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும் என ஐக்கிய நாடுகளின் பெண்கள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் புதிய கல்வியாண்... மேலும் பார்க்க