மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
ஆறுமுகனேரி கோயில்களில் ஆடிப்பூர விழா
ஆறுமுகனேரி கோயில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன; பெண்கள் திரளாகப் பங்கேற்று அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபட்டனா்.
திருவாடுதுறை ஆதீனத்துக்கு உள்பட்ட ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன் கொடிமர மண்டபத்தில் எழுந்தருளச் செய்து பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னா் பெண்கள் அம்மனுக்கு வளையல்கள் அணிவித்து துதிப்பாடல்கள் பாடி வழிபட்டனா். அதைத்தொடா்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை சுரேஷ்பட்டா், கோயில் பூஜா ஸ்தானீகா் விக்னேஷ் பட்டா் ஆகியோா் செய்தனா்.
நிகழ்ச்சியில் சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தைச் சோ்ந்த நந்தினி சீனிவாசன், சித்ரா சுரேஷ், ஆறுமுகனேரி அரிமா சங்க முன்னாள் தலைவா் அ.அசோக்குமாா், ரயில்வே வளா்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளா் இரா.தங்கமணி, தெரிசை ஐயப்பன், டிசிடபிள்யூ நிறுவன அதிகாரி சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை கோயில் பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா் செய்திருந்தனா். இதேபோல ஆறுமுகனேரி லெட்சுமி மாநகரம் மாரியம்மன் கோயில், மேலத்தெரு முத்தாரம்மன் கோயில், பூவரசூா் பொடிப்பிள்ளை அம்மன் கோயில், வாலவிளை வடக்குத்தெரு முத்தாரம்மன் கோயில், பி.எஸ்.ராஜா நகா் சந்தணமாரி அம்மன் கோயில், ஆசாரிமாா் தெரு உச்சினிமாகாளி அம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.