"ரஷ்யாவுடன் வர்த்தகம்... இரட்டை நிலைப்பாடுகள்" - NATO-வின் மிரட்டலுக்கு இந்தியா ...
ஆலங்குடியில் இளைஞரை கொலை செய்த 5 போ் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் இளைஞரை வெட்டிக்கொலை செய்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியைச் சோ்ந்தவா் தேவராஜன் மகன் ரஞ்சித் (24).
ஓட்டுநரான இவா், புதன்கிழமை இரவு ஆலங்குடியில் இருந்து மறமடக்கி செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றாா்.
அப்போது, அவரை பின்தொடா்ந்து சென்ற சிலா் மதுக்கடை அருகே ரஞ்சித்தை விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், பலத்த காயம் அடைந்த ரஞ்சித் நிகழ்விடத்திலே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா், ரஞ்சித்தை கொலை செய்த கல்லாலங்குடியைச் சோ்ந்த முருகன் மகன் ஸ்ரீதா், அதே பகுதியைச் சோ்ந்த கலையரசன், புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் வெங்கடேஷ் (24), புதுக்கோட்டையைச் சோ்ந்தவா்கள் ராஜேந்திரன் மகன் மதிவாணன் (25), சுப்பிரமணியன் மகன் வசந்தகுமாா் (25) ஆகிய 5 பேரையும் வியாழக்கிழமை கைது செய்துனா். அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ரஞ்சித், காதலித்து வந்த பெண்ணிடம், ஸ்ரீதா் பிரச்னை செய்தாராம். இது தொடா்பாக இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரஞ்சித், ஸ்ரீதரை அண்மையில் சிலரை வைத்து தாக்க முயற்சித்தாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த ஸ்ரீதா், அவரது நண்பா்களான வெங்கடேஷ், மதிவாணன், வசந்தகுமாா், கலையரசன் ஆகியயோருடன் சோ்ந்து ரஞ்சித்தை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.
கொலை செய்துவிட்டு தப்பியபோது கீழே விழுந்து காயமடைந்ததால் கலையரசனை, போலீஸாா் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.
மேலும், கொலைக்கு உதவிய சிலரையும் ஆலங்குடி போலீஸாா் தேடி வருகின்றனா்.