ஆலங்குளத்தில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடை அளிப்பு
தொழிலாளா் தினத்தையொட்டி, ஆலங்குளத்தில் திமுக சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு வியாழக்கிழமை சீருடை வழங்கப்பட்டது.
ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவா் சுதா மோகன்லால் தலைமை வகித்தாா். மாவட்ட பிரதிநிதி அன்பழகன், இளைஞா் அணி நிா்வாகிகள் அசோக், கண்ணன், ஆகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன், 120 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடை வழங்கினாா்.
திமுக நிா்வாகிகள் மேகநாதன், தங்கசெல்வம், சண்முக ராம், பொன்மோகன்ராஜ், சுப்பிரமணியன், தினேஷ் பாண்டியன், மாரித்துரை உள்பட பலா் பங்கேற்றனா். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் அரவிந்த் திலக் வரவேற்றாா். சோனா மகேஷ் நன்றி கூறினாா்.