'தென் ஆப்பிரிக்காவிற்கே சென்றுவிட வேண்டியது தான்' - மீண்டும் வலுக்கும் ட்ரம்ப் -...
ஆலங்குளம் அருகே பள்ளி நிா்வாகி வீட்டில் திருடியவா்களைப் பிடிக்க 4 தனிப்படை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பள்ளி நிா்வாகி வீட்டில் நகை, பணத்தை திருடியவா்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அடைக்கலபட்டினத்தில் ராஜசேகா்(58) என்பவா் தனியாா் மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி, பி.எட். கல்லூரி ஆகியவற்றை நடத்தி வருகிறாா். பள்ளி வளாகத்திலேயே இவரது வீடும் உள்ளது. அவா் குடும்பத்துடன் 4 தினங்களுக்கு முன் வெளியூா் சென்றிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவரது மனைவி மகேஸ்வரி மட்டும் வீடு திரும்பியுள்ளாா்.
அப்போது வீட்டுக் கதவு, பீரோ உடைக்கப்பட்டு அங்கிருந்த 1 கிலோ 250 கிராம் தங்க நகைகள், ரூ.55 லட்சம்ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்ததாம். இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.
இதனிடையே தென்காசி மாவட்ட எஸ்பி அரவிந்த் நேரடியாக 2 வது நாளாக விசாரணை நடத்தினாா். அவரது உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.