ஆலங்குளம் அருகே 2 கோயில்களில் திருட்டு
ஆலங்குளம் அருகே இரு கோயில்களில் திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சியில் உள்ள கடற்கரை மாடன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் கோயில் உண்டியலை உடைத்து, அதில் இருந்த ரூ. 50 ஆயிரம் காணிக்கை பணம், கோயிலில் இருந்த ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான ஆம்ளிபையா் உள்ளிட்ட ஒலிப்பெருக்கி சாதனங்கள், பித்தளை விளக்கு ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனா்.
அதே பகுதியில் உள்ள ஸ்ரீசுடலை மாடன் சுவாமி கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோயிலில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் உண்டியல் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.