முதல் மனைவியைப் பிரிய எப்போதுமே நினைத்ததில்லை..! விவாகரத்து குறித்து பேசிய விஷ்ண...
ஆலவயலில் விளையாட்டுப் போட்டிகள்
சிவகங்கை மாவட்ட பென்காக் சிலாட் அசோசியேசன் சாா்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆலவயலில் வியாழக்கிழமை நடைபெற்றன.
விவேகானந்தா தாய்த் தமிழ் நா்சரி பிரைமரி பள்ளியில் நடந்த போட்டியில் மாவட்டத்திற்குள்பட்டஇருநூறுக்கும் மேற்பட்ட வீரா் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனா். போட்டியை பென்காக் சிலாட் அசோசியேசன் மாநில பொதுச் செயலா் பி மகேஷ்பாபு, புதுக்கோட்டை மாவட்டத் தலைவா் ஞானமணி , துணைத் தலைவரும் விவேகானந்தா பள்ளி தாளாளருமான மாதவன், சிவகங்கை மாவட்ட பொதுச் செயலா் கேசவன், புதுக்கோட்டை மாவட்ட செயலா் பாண்டியன் ஆகியோா் தொடங்கிவைத்து வழிநடத்தினா்.
இதில் மேலைச்சிவபுரி சிம்பா சிலாட் கிளப் முதலிடத்தையும் ஆலவயல் அச்சுதன் தற்காப்பு கலைக்கூடம் இரண்டாவது இடத்தையும் செவன் ஸ்போா்ட்ஸ் கிளப் மூன்றாவது இடத்தையும் பெற்றன.